Tuesday 7 May 2013

இரத்தினபுரி வாழ் மலையகத் தமிழ்ப் பெருநில விவசாயத் தொழிலாளிகள் மீது சிங்கள பெளத்த இன வெறியர்கள் தாக்குதல்!


இரத்தினபுரி வாழ் மலையகத் தமிழ்ப் பெருநில விவசாயத் தொழிலாளிகள் மீது சிங்கள பெளத்த இன வெறியர்கள் தாக்குதல்!

செய்தி விமர்சனக் குறிப்பு

இன்று (17 April 2013) அதிகாலை இரண்டு மணியளவில் இரத்தினபுரி மாவட்ட வேவல்வத்தை பொலிஸ் பிரிவில் அலுபொல தோட்டத்தில் வாழும்  மலையகத் தமிழ்த் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிங்கள பெளத்த வெறியர்களின் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் காயப்பட்ட மூன்று தொழிலாளர்கள் தற்போது பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வந்த சிங்கள பெளத்த காடையர்கள்  இந்துக் கோவிலின் தர்மகர்த்தாவை குறி வைத்து தேடியதாகவும், அவரைக் காண முடியாத பட்சத்தில் அவரது சகோதரர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் (16 April 2013) இதே பகுதியில் கலபொட தோட்டத்திலும், இரண்டு நாட்களுக்கு முன்னர் நிவித்திகல பகுதியில் தொலஸ்வல என்ற தோட்டத்திலும், சில நாட்கள் முன்பு பெல்மதுல்ல பகுதியின் லெல்லுபிடிய, கோணகும்புற ஆகிய இரண்டு தோட்டங்களிலும் இத்தகைய தாக்குதல்கள்  நடைபெற்றுள்ளன.

இரத்தினபுரி மாவட்ட தோட்டங்கள் சிங்களக் கிராமங்களால் புடை சூழப்பட்டவை.இதனால் தொடர்ந்து இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருபவை.இது இன்று தொடங்கியது அல்ல 1983 லிருந்து, சொல்லப்போனால் அதற்கு முன்பே இருந்து, தொடர்கிற கதையாகும்.
இரவு வேளையில் கூட்டம் கூட்டமாக வந்து சிங்கள பெளத்த காடையர்கள் எந்நேரமும் தாக்குவார்கள் என்ற அச்சத்துடனேயே  இரத்தினபுரி தோட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் இரவுகளில் விழித்திருந்து தமது அன்றாட வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.

இதே வேளையில் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள பெளத்த காடையர்கள் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.மசூதிகள் மீது தாக்குதல்,வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல், கலாச்சார விழுமியங்கள் மீது தாக்குதல், நில அபகரிப்பு, மீள் குடியேற்ற உரிமை மறுப்பு,என இவை தொடர்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளை மே 18 2009 இல் தோற்கடித்துவிட்ட சிங்களம், குறிப்பாக பக்ச பாசிஸ்டுக்கள் தமது இராணுவ சர்வாதிகார பாசிசத்தை நிலை நிறுத்த ’பாசிசப் பிக்கு கும்பலுடன்’ கூட்டமைத்து புதிய தாக்குதல் களம் ஒன்றைத் திறந்துள்ளனர்.

தமிழீழ இனச்சிறுபான்மையிரான மலையகத் தமிழர்களுக்கு எதிராகவும், மதச்சிறுபான்மையினரான இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்களம் புதிய தாக்குதல் களம் ஒன்றைத் திறந்து,அவர்களுக்கு எதிராக வெறி கொண்டு பாய்ந்த வண்ணம் தான் நல்லிணக்க நாடகம் ஆடி வருகின்றது.
இந்த நல்லிணக்கப் பிண்டத்துக்கு இரண்டு பெரு தொடைகள் உண்டு

1) அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப் படுவோம்!
 2) ஐக்கியப்பட்டு ’ஒரு நாட்டு’ புரட்சி செய்வோம்!

இந்த இரண்டு பாதைகளின் ஆதரவாளர்களும் பிண்டத்தின் பிணத்தொடை நக்கிப் பிழைப்போரே ஆவர்!

நமது பாசையில் சொல்வதானால் இவையிரண்டும் சிங்களத்தைப் பலப்படுத்தும் பாதைகளே ஆகும்.

ஜனநாயகப் பாதை:

ஈழத்தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கு வழி, தமிழீழமே!
இன,மத சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தமிழ்பேசும் மக்களிடையேயும் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்து.
மேற்கண்ட புரட்சிகர புதிய ஜனநாயக அரசியல் முழக்கத்தின் கீழ் அணிதிரளுமாறு அறை கூவல் விடுக்கின்றோம்!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...