Tuesday 7 October 2014

தமிழக முதல்வர் தண்டனை, தமிழீழப் பிரதமர் வேதனை!

முதல்வர் ஜெயலலிதா தண்டனைக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது: பிரதமர் வி.உருத்திரகுமாரன்

[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 10:59.09 AM GMT ]

'தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீது பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் விதித்து அளித்துள்ள தீர்ப்பின் பிரகாரம் அவர் முதல்வர் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

இந்த நெருக்கடியான நிலையைச் சட்டரீதியாக எதிர் கொண்டு மீண்டும் தமது அரசியல் வாழ்வில் அவர் வெற்றி பெறுவார் என நாம் உறுதியாக நம்புகிறோம்' இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அதிமுகவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான நமது எம்ஜஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செல்வி ஜெயலலிதா அவர்கள் 2011 ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக நான்காவது தடவை பதவியேற்ற பின்னர் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான, உறுதியான, துணிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து வந்தவர். ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களைத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றக் காரணமாக இருந்தவர்.



சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கும் தமிழீழத் தாயக மக்களால் தமக்கான ஒரு பாதுகாப்புக் கவசமாக உணரப்பட்டவர். தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களின் வளமான எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு நல்லபல திட்டங்களை நிறைவேற்றி வந்தவர்.

இத்தகையதொரு நிலையில் ஜெயலலிதா அவர்கள் தண்டனைக்குள்ளாகியிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருவதாக உள்ளது.

1996ம் ஆண்டில் இருந்து 18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா அவர்கள் மேலான வழக்கின் மீது வழங்கப் பட்டுள்ள தீர்ப்பு கடுமையானதெனப் பலரும் கருதுகின்றனர்.

நீதிபதி சட்டத்தின் எல்லையைத் தாண்டி இத் தண்டனையை வழங்கியுள்ளதாக இந்தியாவின் புகழ் பெற்ற மூத்த பெரும் வழக்குரைஞரான ராம் ஜெத்மலானி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்தத் தீர்ப்பினை ஜெயலலிதாவினது அரசியல் எதிரிகள் வரவேற்கக்கூடும். ஆனால் சட்ட அறிஞரான தன்னால் ஏற்க முடியாதுள்ளது' எனவும் அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் தீர்ப்பின் தருணமும் கடுமையும் இதன் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாமோ என்ற ஐயப்பாட்டையும் சில மட்டங்களில் தோற்றுவித்துள்ளன. செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்தத் தீர்ப்பின் மீது உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய நீதித்துறை இவ் வழக்கு விடயத்தில் பொறுப்பானதும் நியாயமானதுமான முறையில் செயற்படும் என்பதே எமது நம்பிக்கையாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார் என அதிமுகவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான நமது எம்ஜஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

உல்லாச புரியாகும் மைய மலையகமும், Spain இல் உல்லாசத் துறை எதிர்ப்பும்.

Thousands protest in Spain's Canary Islands over mass tourism By  Borja Suarez    April 21, 2024   SANTA CRUZ DE TENERIFE, Spain, April ...