Tuesday 7 October 2014

ஜெயா மனு நிராகரிப்பு.

திருடிச் சொத்துக் குவித்த வழக்கில் சிறைவாசம் அநுபவிக்கும் செல்வி-அம்மா ஜெயலலிதா பிணையில் விடுதலையாக அளித்த மனுவை இந்திய-கர்நாடக நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவசரமாக விடுதலை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லையென நீதித்தரப்பு கருத்து வெளியிட்டுள்ளது.




ஜெயலலிதா ஜாமின் மனு நிராகரிப்பு
By Sriram Senkottai
First Published : 07 October 2014 04:13 PM IST தினமணி


ஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார்.

ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, தண்டனையைத் தடை செய்யும் மனுவும், ஜாமின் கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார்.

முன்னதாக, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து செய்தி வெளியானது. அதற்கு, மதியம் 2.30க்குப் பின்னர் நடைபெற்ற வாதத் தொடர்ச்சியின்போது, அரசுத் தரப்பில் இருந்து ஆஜரான வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் வெளிவிட ஆட்சேபம் ஏதும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதனால், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்துவிடும் என்று செய்தி பரவியது.

மேலும், நீதிபதி தனது உத்தரவை வாசிக்கத் தொடங்கியவுடனே, அதற்கான நம்பிக்கை தெரிந்தது. இதனால், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில், தனது உத்தரவின் இறுதியில் நீதிபதி சந்திரசேகரன் இந்த வழக்கில் ஜெயலலிதாவை ஜாமினில் விடுவிப்பதற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என்று கூறினார்.

அதிமுக தொண்டர்கள் - மகிழ்ச்சியும் சோகமும்:

முதலில் ஜாமின் கிடைத்ததாக வெளியான தகவல் கேட்டதும், பெங்களூர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். இனிப்புகள் பரிமாறப்பட்டன. பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில், தீர்ப்பின் முடிவில், ஜெயலலிதா  ஜாமின் மனு நிராகரிக்கபட்டதாக செய்தி வெளியானவுடன், சோகம் பரவியது. அதிமுக தொண்டர்கள் பெரும் சோகம் அடைந்தனர்.

சிறைவாசம் நீடிப்பு!

கடந்த செப்.27ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப் படும் தீர்ப்புக்காக பெங்களூர் சென்றார் அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா. தீர்ப்பில் அவர் குற்றவாளி என்றும், 4 வருட சிறை மற்றும் நூறு கோடி ரூபாய் அபராதமும் என தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, அவர் முதல்வர் பதவி இழந்ததுடன். சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார். தொடர்ந்து அவர் பெங்களூர் பரப்பரன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடனே அவர் ஜாமீன் பெற நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. ஆனால், அடுத்தடுத்து வந்த தசரா விடுமுறை காரணமாக, விடுமுறைக் கால சிறப்பு நீதிமன்றம் அவருடைய ஜாமின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டது.

இந்நிலையில் அவர் மேலும் சில நாட்கள் சிறையில் கழிக்க வேண்டியதாகிவிட்டது. தொடர்ந்து, அவரது ஜாமின் மனு அக்.7 (இன்று) விசாரிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 73வது வழக்காக பட்டியலிடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. நீதிபதி சந்திரசேகரன், ஜெயலலிதா தரப்பு வாதத்தைக் கேட்ட பின்னர், மதியம் 2.30க்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி, 2.30க்கும் வாதம் தொடர்ந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் வெளிவிட எதிர்ப்பு இல்லை என்று கூறினார். இதை அடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் 11 நாள் சிறை வாசம் முடிந்து ஜெயலலிதா இன்று வெளியாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அரசு வழக்குரைஞர் மறுக்காதபோதும் நிராகரிப்பு?

முன்னதாக, ஜெயலலிதா தரப்பில் ராம் ஜேத்மலானியும், சசிகலா, இளவரசி தரப்பில் வழக்குரைஞர் அமீத் தேசாயும் வாதிட்டனர். ஜெயலலிதா நாட்டை விட்டு எங்கும் தப்பி ஓடி விட மாட்டார் என்று ராம் ஜேத்மலானியும், வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைப்பார் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்கும் வாதிட்டனர்.

மேலும், லாலு ஜாமீன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைச் சுட்டிக் காட்டி ராம் ஜேத்மலானி வாதிட்டார். இருப்பினும், உணவு இடைவேளை முடிந்து 2.30க்கு மீண்டும் வாதம் தொடரும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

ஜெயலலிதா தரப்பு வாதம் முடிந்த நிலையில், சசிகலா தரப்பில் தொடர்ந்த வாதத்தில், ஜெயலலிதாவின் பினாமியாக சசிகலா செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், ஜெயலலிதா சொத்து சேர்க்க சசிகலா உடந்தையாக இருந்தார் என்பதை ஏற்க முடியாதென்றும் வாதிட்டார் அமீத் தேசாய்.

ஆனால், பின்னர் அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், நிபந்தனை ஜாமின் வழங்கப் படுவதற்கு ஆட்சேபம் இல்லை என்றார். இந்நிலையில், வாதம் முடிந்தபிறகு மதியம் 3.35 மணி அளவில் தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியபோது, இவற்றை எல்லாம் குறிப்பிட்ட நீதிபதி, பின்னர், இந்த வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் குற்றவாளிக்கு ஜாமின் வழங்க எந்த வித முகாந்திரமும் இல்லை என்றும், குற்றவாளி தரப்பில் கோரப்பட்ட தண்டனைக்குத் தடை கோரும் மனு மற்றும் ஜாமின் மனுவை நிராகரிப்பதாக அவர் அறிவித்தார். மேலும் ஜாமின் கொடுப்பதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் கூறினார்.

இதனால் ஜெயலலிதாவின் சிறைவாசம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த செய்தியைக் கேட்டதும் அதிமுக தொண்டர்கள் பெரிதும் சோகம் அடைந்தனர்.

உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்பு!

நீதிபதி சந்திரசேகரன் தனது உத்தரவில், ஜாமின்  கொடுப்பதில் தமக்கு விருப்பமில்லை என்று தெரிவித்த பின்னர், அதிமுக தரப்பு வழக்குரைஞர்கள் பெரிதும் குழப்பம் அடைந்தனர். இதன் பின்னர் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாகவும் தெரிவித்தனர். இதனால் ஜெயலலிதா உடனடியாக சிறையில் இருந்து வெளியாகும் வாய்ப்பு தள்ளிப் போய்விட்டது.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...