Thursday 13 November 2014

மலையக மக்கள் நூற்றுக்கு நூறு வீத வாக்கை ஜனாதிபதிக்கு வழங்குவர்: பிரபா கணேசன்


மலையக மக்கள் நூற்றுக்கு நூறு வீத வாக்கை ஜனாதிபதிக்கு வழங்குவர்: பிரபா கணேசன்

Submitted by MD.Lucias on Thu, 11/13/2014 - 16:29

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவகுக்கு மலையக மக்கள் நூற்றுக்கு நூறு வீதம் தனது வாக்குகளை வழங்கி வெற்றிபெற செய்வர். இதில் எந்த சந்தேகமும் இல்லை என தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பப்  பிரதியமைசர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நீதியரசர்களின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே கருத வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த காலத்தில் இனவேறுபாடு இன்றி அனைத்து தரப்பினருக்கும் சமமான சேவைகளை செய்துள்ளார். யுத்தத்தை நிறைவு செய்து வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் கிராமம் நகரம் என சகல இடங்களிலும் அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திலும் மக்களுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக செயற்படுபவர்கள் என்றால் ஜனாதிபதி தேர்தலை சாதகமாக பயன்படுத்தி தமக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...