Thursday 13 November 2014

விரைவில் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: ஐ. தே.க.

விரைவில் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்:
ஐ. தே.க.

Submitted by MD.Lucias on Fri, 10/17/2014 - 16:10

தமிழ் தேசிய கூட்டமைப்புடனான இரு தரப்பு  பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் துரித  முயற்சியினை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருகின்றது. வெகு விரைவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும்  ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது.

அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஏனைய எதிரணிகளை சந்திக்கும் முயற்சிகளையும் பொது எதிரணிக்கான ஆட்களை ஒன்று திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது  தமிழ் மக்களின் ஆதரவினை பெறும் நோக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான சந்திப்புக்களுக்கான முயற்சிகளை தொடர்ச்சியாக   மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்  ரணில் விக்கிரமசிங்க தமிழ்  தேசியக் கூட்டமைப்புடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தயார் என தெரிவித்திருந்த  நிலையில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புடனான உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தையினை ஐக்கிய தேசிய கட்சி  மேற்கொண்டுள்ளது.

இரு கட்சிகளினதும் முக்கிய  பிரமுகர்கள் இப்பேச்சுவார்த்தையினை கொழும்பில் நடத்தியுள்ளதுடன் சில  முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர்  உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், கடந்த வாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பினை மேற்கொள்ளவிருந்த போதிலும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதன் காரணத்தினால் பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போயுள்ளது. எனினும் வெகு விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். அதேபோல் அரசாங்கத்தின் கூட்டணிகள் ஒரு சிலரையும்
சந்தித்துள்ளோம். எனவே, வெகு விரைவில் பொதுக் கொள்கையொன்றினை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Why are foreign envoys making a beeline to the JVP?

  T he JVP misread the invite as the Indians had acknowledged that the party would be the next government in waiting and Anura Kumara, the p...