Thursday 8 January 2015

``ஜனநாயகத்தைக் காக்கும் விஞ்ஞான ஆசிரியர்கள்``!

ஜனநாயகத்தைக் காப்பதற்கு தவறாது வாக்களியுங்கள்
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம்:-01 ஜனவரி 2015

ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான இறுதி சந்தர்ப்பமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நோக்கப்படுகிறது. மக்களுக்கான அரசு என்ற நிலையிலிருந்து அரச அதிகாரத்தினருக்காக மக்கள் என்ற நிலைக்கு முழு நாடும் இழுத்துச் செல்லப்படுவதைத் தடுப்பதற்குரிய நேரம் இதுவாகும்.

அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் நலன்களைக் கருதி முன்னெடுக்கப்படாமல் தரகுப்பணம் பெறும் நோக்கத்தைக் கொண்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன. அபிவிருத்திக்குச் செலவிடப்படும் பணம் மற்றும் அதிகாரவர்க்கத்தினர் பெறும் தரகுப்பணம் இரண்டுமே இந்நாட்டு மக்களுக்குரியவை. பெருமளவு மக்கள் பணத்தை தரகுப்பணமாகக் கொள்ளையடித்து விட்டு ஏதோ தமது பணத்தில் அபிவிருத்தி செய்வது போல் நாடகமாடுவது முழு மக்களையுமே ஏமாளிகளாக்க முனையும் கபடத்தனமாகும்.

மக்களின் வரிப்பணம் ஒரு சிறு அதிகாரக் கும்பலின் சுகபோக ஆடம்பர வாழ்விற்காகச் சூறையாடப்படுகிறது. நீதி நிர்வாகச் சீர்கேடுகள், சட்டம் ஒழுங்கு குலைவு, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பன அதியுச்ச நிலையை அடைந்துவிட்டன. மக்கள் வரிப்பணத்தில் வாழ்பவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.

வடக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதிகாரமற்றவர்களாயுள்ள நிலையில் மக்களாதரவைப் பெறமுடியாதவர்களிடம் சகல அதிகாரங்களும் குவிந்துள்ளதிலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம்.

இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் ஜனநாயகத்துக்கு முதலுதவி அளிக்கும் அவசரத்தில் தமிழரின் உரிமைப் பிரச்சினை முக்கியத்துவத்தை இழந்திருப்பது உண்மையே.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களோ அல்லது அவர்களின் முக்கிய ஆதரவாளர்களோ தேசிய இனப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ளவில்லை. இந்த நிலையில் இவர்களிடமிருந்து தேசிய இனப்பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் எதிர்பார்க்க முடியாது என்பதும் நிச்சயம்.

எனினும் இதன் காரணமாக இத் தேர்தலைப் புறக்கணிக்க கோருவதும் பொருத்தமற்றது. ஏனெனில் ஜனநாயகரீதியில் தமிழ் மக்களுடைய உரிமைக் கோரிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனநாயகம் தப்பி பிழைத்திருப்பது அவசியம். முழு இலங்கையிலும் ஜனநாயகச் சூழல் சற்று மலரும் போது தமிழ் மக்களும் அதன் பலனை அனுபவிக்க முடியும். அதற்காக தேர்தல் என்ற
வடிவில் எமக்கு முன்னால் உள்ள வாய்ப்பினை நாம் பயன்படுத்த வேண்டும்.

இதனால் எதிர்வரும் தேர்தலில் தவறாது வாக்களித்து எமது மக்களின் வரிப்பணத்தையும், நீதி நிர்வாகத்தினையும், சட்டம் ஒழுங்கையும், ஜனநாயகத்தையும் காக்கும் எமது நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சர்வாதிகாரத்தை வளர விடுவது முழு நாட்டையுமே மீளமுடியாத அழிவுக்குக் கொண்டு செல்லும். சர்வாதிகார வழிமுறைக்கு சென்ற நாடுகளின் வரலாற்றிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

எமது மக்களின் வாக்குப்பலம் சிறியதென்றாலும் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக அது இருக்கலாம். 2005ஆம் ஆண்டில் எமது மக்கள் தேர்தலைப் புறக்கணிக்காமல் வாக்களித்திருந்தால் அதன் முடிவுகள் வேறு விதமாக இருந்திருக்கலாம்.எனவே எங்கள் ஒவ்வொருவரினதும் வாக்கின் முக்கியத்துவத்iதை உணர்ந்து

ஜனநாயகத்தைக் கட்டி எழுப்பக்கூடியவர் -(அதாவது மைத்திரி ENB) வெல்வதற்காக தவறாது வாக்களிக்குமாறு எம் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...