Friday 7 October 2016

காவிரி கழகப் போராட்டம்

காவிரியில் கூடுதல் நீர் திறப்பு ? சித்தராமையா 
By: Mayura Akilan Updated: Wednesday, September 7, 2016, 3:57 [IST] பெங்களூரு:

காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் பெங்களூருவில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் எனத் தெரிவித்தார். காவிரியில் 50 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டிருந்தது.


இதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெற இருப்பதாக கூறினார். அக்கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றார். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்தே கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக பதற்றமான நிலை நீடித்து வருகிறது. பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சித்தராமைய்யா தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.  இதில் சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையின் அனைத்துக்கட்சித் தலைவர்கள், கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், கர்நாடக அமைச்சர்கள், காவிரி நதிநீர் படுகை மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் இந்தாண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது. மழை இல்லாததால்,நீர் நிலைகள் வறண்டு போய் உள்ளன.எனவே இதனை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறோம்.
 கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு கண்டறிய காவிரி கண்காணிப்பு குழு இங்கு வருகை தந்து பார்வையிட வேண்டும். 
உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்கும்.
விவசாயத்துக்கும், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் வழங்க வேண்டியுள்ளது.  இதனை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல திருத்தப்பட்ட சீராய்வு மனு ஒன்றை நாளை தாக்கல் செய்ய இருக்கிறோம். 

இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று இரவு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் எனத் தெரிவித்தார். முன்னதாக தண்ணீர் திறந்து விட எதிர்ப்புத் தெரிவித்து மாண்டியா மாவட்டத்தில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடந்தது.


காவிரிக்காக கூடிய அனைத்துக்கட்சிக் கூட்டம்: பாதியில் வெளியேறிய தமிழிசை

By: Mayura Akilan Updated: Friday, October 7, 2016, 16:39 [IST] சென்னை :

காவிரி பிரச்சனை தொடர்பாக சென்னை எழும்பூரில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. விவசாயி சங்க ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாஜக, தமாகா, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றன. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் பாதியிலேயே  வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி… நீல நிற ரிப்பன் அணிந்து சென்னை சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்
By: Amudhavalli Updated: Friday, October 7, 2016, 14:00 [IST]

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி சென்னை தரமணி வளாகத்தில் பயிலும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் மத்திய அரசு அதனை அமைக்க மறுத்துள்ளது. மத்திய அரசின் கர்நாடக சார்பு போக்கைக் கண்டித்து தமிழக முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் அரசியல் சாசன விரோதப்போக்கை கண்டித்து இன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் கையெழுத்துப் பேரணி நடத்தியுள்ளனர். அரசியல் சாசனப்பிரிவு 262-ன் கீழ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் அதனை மத்திய அரசு உடனே செய்ய வேண்டும் என்றும் காவிரி முழக்கம் என்ற பெயரில் அமைதி போராட்டத்தை கடந்த 2 நாட்களாக சட்ட மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த அமைதிப் போராட்டத்தின் ஒரு அங்கமாக, கடந்த இரண்டு நாட்களாக நீலநிற ரிப்பன் பட்டைகளை அணிந்து கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து 3 நாட்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தின் கடைசி நாளான இன்று காவிரி பிரச்சனைத் தொடர்பான வாதங்களை சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் வகையில், மாணவர்கள் கையெழுத்து பேரணி நடத்தியுள்ளனர். தமிழகத்தின் நியாயமான, சட்டப்படியான கோரிக்கைகளை இந்திய பிரதமருக்கும், தமிழக கவர்னருக்கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் மற்றும் கர்நாடக முதலமைச்சருக்கும் தபால் மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் அனுப்ப உள்ளனர்.

காவிரி கழகப் போராட்டம்.
 காவிரி கழகப் போராட்டம்

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட கழகம் தொடர்ந்து போராடிவருகின்றது. மன்மோகன் ஆட்சிக்காலத்தில் Thursday, 8 March 2012 `முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்`! என்கிற நூலை வெளியிட்டது. இந்நூலானது காவிரி நதி நீர்ப் பிரச்சனையை இயங்கியல் பொருள்முதல்வாத மார்க்சிய நோக்கு நிலையில் ஆய்வு செய்த நூலாகும்.

இந்நூல் பின்வரும் கேள்விகளை எழுப்பி;

``முல்லைப் பெரியாற்று நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் சிக்கல் நீடித்து வருகிறது. இவ்வாறு சிக்கல் நிலவுவதற்கான காரணம் என்ன? ஆங்கிலேயே ஏகாதிபத்தியவாதிகளால் இந்த அணை எவ்வாறு கட்டப்பட்டது? முல்லை பெரியாறு அணைக்கான ஒப்பந்தம் தமிழர்களின் நலன்களுக்காக போடப்பட்டதா அல்லது காலனிய ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டல் நலன்களுக்காக போடப்பட்டதா? இந்த ஆறு இரண்டு தேசிய இனங்களுக்கு சொந்தமானதா அல்லது ஒரே இனத்திற்கு சொந்தமானதா? ஆற்றில் தமிழகத்தின் உரிமையை எவ்வாறு பாதுகாப்பது? நீர்ப் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்கு நீர் மிகையாக உள்ள கேரளாவிலிருந்து நீரை பெறுவதற்கான சிக்கலுக்கு எவ்வாறு தீர்வுகாண்பது? மேற்கண்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விடைகாண முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட வரலாற்றையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தன்மை பற்றியும், தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் பரிசீலனை செய்வோம்!`` `முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்` நூலில் இருந்து
விடைகண்டு தீர்வையும் முன்வைத்தது. காவிரிப்பிரச்சனையில் ஆர்வம் கொண்டுள்ள தமிழக மாணவர்கள் இந்நூலை அறிவு நேர்மையுடன் கற்றறிய வேண்டுமென பகிரங்கமாக ஈழத்தில் இருந்து புதிய ஈழப்புரட்சியாளர்கள் தயவுடன் வேண்டுகின்றோம்.



கழகத்தின் புரட்சிகர  ஜனநாயக முழக்கத்தின்  கீழ் விவசாயிகளே மாணவர்களே உழைக்கும் மக்களே ஒன்றிணைவீர்!



No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...