Saturday 4 February 2017

அந்நியருக்கும், ஆமிக்கும், ஆவாவுக்கும் சுதந்திரம்!




கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்கிறது

 ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

(கே.குமணன்,கண்டாவளை நிருபர்)

முல்­லைத்­தீவு கேப்­பா­ப்பு­லவு மக்கள் தமது சொந்த நிலத்தை கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள விமா­னப்­ப­டை­யினர் அதனை விடு­விக்­க­வேண்­டு­மெனக்கோரி விமா­னப்­படை முகாமின் முன்­பாக கொட்டும் பனி­யி­ர­வையும் சுட்­டெ­ரிக்கும் வெயி­லையும் பொருட்­ப­டுத்­தாது முன்­னெ­டுத்­துள்ள தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றது.



கேப்­பாப்­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில்  84 குடும்­பங்­க­ளுக்கு சொந்­த­மான 40 ஏக்­க­ருக்கு  மேற்­பட்ட காணி­களை கைய­கப்­ப­டுத்தி விமா­னப்­ப­டைத்­தளம் அமைத்­துள்ள விமா­னப்­ப­டை­  யினர், அதனை பலப்­ப­டுத்தி வேலிகள்  அமைத்து மக்கள் செல்­ல­மு­டி­யா­த­வாறு தடை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி காணிகள் அள­வி­டப்­படும் எனவும் காணி­க­ளுக்கு சொந்­த­மான மக்கள் அனை­வ­ரையும் அப்­ப­கு­திக்கு வரு­மாறும் கேப்­பா­ப்பு­லவு கிரா­ம­சே­வகர் அறி­வித்தல் விடுத்­தி­ருந்த நிலையில் அப்­ப­கு­திக்கு வரு­கை­தந்­தி­ருந்­த­மக்கள் நாள்­மு­ழு­வதும் வீதியில் காத்­தி­ருந்த போதும் அதி­கா­ரிகள் எவரும் காணிகள் அள­விட வரு­கை­தந்­தி­ருக்­க­வில்லை.


இந்த நிலையில் ஆத்­தி­ர­ம­டைந்த மக்கள் அன்­றைய தினம் முதல் தாம் தமது சொந்த நிலங்­களில் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டம் தொட­ரு­மென கூறி தொடர் போராட்­டத்­தி­லீ­டு­பட்டு வரு­கின்­றனர். இந்த நிலையில் நேற்று முன்­தினம் போராட்டம் இடம்­பெறும் பகு­திக்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதி­பர்,கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செய­லா­ளர் மற்றும் வன்னி பிராந்­திய விமா­னப்­படை தள­ப­தி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் என பலரும் வருகை தந்து மக்­க­ளோடு கலந்­து­ரை­யாடி சம­ரச முயற்­சி­களில் ஈடு­பட்ட போதிலும் மக்கள், தமது சொந்த நிலத்தில் காலடி எடுத்து வைத்­தால்தான் இந்த போராட்டம் நிறை­வு­பெறும் என கூறி தொடர்ந்து போராடி வரு­கின்­றனர்.


இந்த நிலையில் நாலா­வது நாளா­கவும் நேற்றும் சிறு­வர்கள், குழந்­தைகள், பெண்கள், ஆண்கள், முதி­ய­வர்கள் என அனை­வரும் இணைந்து தமது போராட்­டத்தை முன்­னெ­டுத்தனர். இதேவேளை போராட்­டத்­தி­லீ­டு­பட்டு வந்த முதி­யவர் ஒருவர் திடீ­ரென மயக்­க­முற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்­கு­டி­யி­ருப்பு ஆதா­ர­வைத்­தி­ய­சா­லையில் இருந்து வரு­கை­தந்த நோயாளர் காவு­வண்­டியில் இவர் முல்­லைத்­தீவு மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­செல்­லப்­பட்டார்.இவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டவர் தொடர்ச்­சி­யாக போராட்­டத்தில் ஈடு­பட்டு வந்த மாணிக்கம் கணேசன் (வயது 50) என்­ப­வர் ஆவார்.



மேலும் நேற்றுமுன்தினம் இரவு போராட்ட இடத்­துக்கு தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் தலைவர் வீ.ஆனந்­த­சங்­கரி, வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன், வடக்கு மாகாண சபை உறுப்­பினர் துரை­ராசா ரவி­கரன், அனந்தி சசி­தரன் ஆகியோரும் வரு­கை­தந்­தி­ருந்­தனர்.












மேலும் நேற்றையதினம் குறித்த பகு­திக்கு வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன், வடக்­கு­மா­கா­ண­சபை பிரதி அவைத்­த­லைவர் கம­லேஸ்­வரன் மற்றும் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் ரவி­கரன் ஆகியோர் வரு­கை­தந்­தி­ருந்­தனர்.


மக்களுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், பாய் போன்ற பொருட்களை வர்த்தகர்கள் நலன்விரும்பிகள், இளைஞர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வழங்கி ஆதரவளித்து வருகின்றனர். அத்தோடு மக்கள் தாம் வீசும் குப்பைகளை தாமாகவே அகற்றி சூழலை சுத்தமாக வைத்திருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி:நன்றி வீர கேசரி

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...