Saturday 18 March 2017

அறுபது ஆண்டுகால அநீதிக்கு, நீதி வழங்க அவகாசம் வழங்கும் ஐ.நா

தாமதிக்கப்படும் நீதி அநீதி!
 

கடும் நிபந்தனைகள் எதுவுமே இல்லாமல் இரு வருட அவகாசம் : இலங்கைக்கு வழங்குகிறது ஐ.நா.

கடும் நிபந்தனைகள் எதுவுமே இல்லாமல் இரு வருட அவகாசம் : இலங்கைக்கு வழங்குகிறது ஐ.நா.
கால அட்டவணை, ஐ.நா.  மனித உரிமைகள் ஆணையாளர் அலு வலகம் இலங்கையில் அமைத் தல் உள்ளிட்ட கடும் நிபந்தனை கள் இல்லாமல், 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்றுவ தற்கு இரண்டு வருட கால அவ காசம் வழங்கி, ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான இறுதித் தீர்மானம் நேற்றுக் காலை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்கா, வட அயர்லாந்து, பிரிட்டன், மசி­டோ­னியா, மொன்­டி­நீக்ரோ ஆகிய நாடு­கள் இணைந்து இந்­தத் தீர்­மா­னத்தை ஜெனிவா நேரம் நேற்­றுக் காலை 10.20 மணிக்­குச் சமர்ப்­பித்­துள்­ளன. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 34 ஆவது கூட்­டத் தொடர் ஜெனி­வா­வில் நடை­பெற்று வரு­கின்­றது.

கடந்த 3ஆம் திகதி இலங்கை தொடர்­பில் இந்­தக் கூட்­டத் தொட­ரில் முன்­வைக் கப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­தின் வரைவு வெளி­யா­கி­யி­ருந்­தது. இதன் பின்­னர் 7ஆம் திகதி வரைவு தொடர்­பில் முறை­சா­ரக் கூட்­டம் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. 2015 ஆம் ஆண்டு தீர்­மா­னத்தை இலங்கை நிறை­வேற்­று­வ­தற்­குக் கால அட்­ட­வணை தேவை என்று சுவிற்சர்­லாந்து வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் அல் ஹுசைன், இலங்­கை­யின் முன்­னேற்­றங்­க­ளைக் கண்­கா­ணிப்­ப­தற்கு இலங்­கை­யில் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அலு­வ­ல­கம் நிறு­வப்­பட வேண்­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார். இதே­வேளை, இந்­தத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­குக் கடும் கண்­கா­ணிப்­புத் தேவை என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கோரி­யி­ருந்­தது. மேற்­படி விட­யங்­கள் தீர்­மா­னத்­தில் உள்­ளீர்க்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில், முன்­வைக்­கப்­பட்ட வரை­வில் எந்­த­வொரு மாற்­றங்­க­ளும் மேற்­கொள்­ளப்­ப­டா­மல், அத­னையே மீள­வும் இணை அனு­ச­ரணை வழங்­கிய நாடு­கள் ஐ.நா. மனித உரி­மை ­கள் சபை­யில் நேற்­றுச் சமர்ப்­பித்­துள்­ளன.

நடப்­புக் கூட்­டத் தொட­ரில் தீர்­மா­னங்­கள் சமர்ப்­பிப்­ப­தற்கு இறுதி நாள் நாளை மறு­தி­னம் 16 ஆம் திக­தி­யா­கும். அதற்கு முன்­ன­ரா­கவே, இலங்கை தொடர்­பான தீர்­மா­னம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

தீர்­மா­னம் தொடர்­பான விவா­தம் எதிர்­வ­ரும் 23 ஆம் திகதி நடை­பெ­றும். போர்க்­குற்ற விசா­ர­ணைப் பொறி­மு­றை­க­ளில் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளின் பங்­க­ளிப்பை நீக்­கு­வ­தற்கு இலங்கை அரசு முயற்­சித்த போதும், அந்த வாச­கம் தீர்­மா­னத்­தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.  

No comments:

Post a Comment

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...